பொது இடங்களில் முஸ்லிம்பெண்கள் புர்கா அணியும் சட்டத்தை பெல்ஜியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.ஐரோப்பிய யூனியன் நாடுகளில், முஸ்லிம்பெண்கள் புர்கா அணிவதை தடைசெய்த இரண்டாவது நாடாகபெல்ஜியம் காணப்படுகின்றது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரான்ஸ் ,புர்காவை தடைசெய்த முதல்நாடாகும்.இதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக அநாவசியமான சட்டத்தை பெல்ஜியம் கொண்டுவந்துள்ளது.பெல்ஜியப் பாரளுமன்றத்தில் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் புர்காவை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டது.பெல்ஜியத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இச்சட்டத்தின் பிரகாரம், இச்சட்டத்திற்கு யாரேனும் பெண்கள் இணங்கவில்லை.எனின் அவர் 137.50 யூரோ நாணயங்கள் தண்டப்பணம் செலுத்தவேண்டியதுடன்,அவருக்கு ஏழு நாட்கள்
சிறைத்தண்டனை வழங்கப்படும்.என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே வேளை இரு பெண்கள் புர்காவை அணிந்து கொண்டு,இச்சட்டமானது மனித உரிமைமீறும் செயலாகும்.என நீதிமன்றத்தீர்ப்புக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டதாக, சர்வதேச ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.' இச்சட்டமானது,மத உரிமைகளை மற்றும் அடிப்படை உரிமைகளை முற்றாக மீறும்நடைமுறையாகும்.' எனஇப்பெண்களின் சட்டத்தரணி தெரிவித்தார்.என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.ஐரோப்பாவின் மொத்த சனத்தொகையில் 10மில்லியன் முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். பெல்ஜியத்தில்4இலட்சத்து 50ஆயிரம் முஸ்லிம் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சிலவாரங்களுக்கு ஐரோப்பிய யூனியன் மனிதஉரிமைகள் கண்கானிப்பு அமைப்பு, இச்சட்டத்தைக்கண்டித்ததுடன்,இதன் மூலம் ஐரோப்பியக்கண்டம் முழுவதும் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவும் தெரிவித்தது.
0 Comments