அண்மையில் நோர்வேயில் பயங்கரவாத்தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பேஹ்ரின் பிரேவிக்,இஸ்லாத்திக்கு எதிரான ஓர் வலையமைப்பைச் சேர்ந்தவர் எனவும் அவருக்கு மேற்குநாடுகளில் உள்ள சில பயங்கரவாதக் கும்பல்களுடன் தொடர்புள்ளதாகவும், பிரேவிக்கின் சட்டத்தரணி கூறியுள்ளார்.பிரேவிக் ,அப்பாவிநோர்வே மக்களைக்கொல்வதற்காக அனுதாபப்படவிடவில்லை.என பிரேவிக்கின் சட்டத்தரணி சர்வதேசஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.கடந்த ஜூலை மாதம் 22ம்திகதி,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில்அரசாங்க தலமைக் காரியாலயமொன்றில் நடந்த பாரிய குண்டுவெடிப்பினால் 8பேர் கொல்லப்பட்டதுடன்,மேலும் பலர் காயமடைந்தனர்.அதே நாளில், ஒஸ்லோவிக்கு அருகில் உள்ள ஒடோகேயா தீவில் நடைபெற்றதுப்பாக்கிச்சூட்டில்,நோர்வேயின் தொழில்கட்சியின் இளைஞர்பிரிவின் 68அங்கத்தவர்கள் கொல்லப்பட்டனர்.இதற்காக பிரேவிக் 30வருட சிறைத்தண்டணையை பெறுவார்.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டகொண்டிருந்தபோது பொலீஸாரினால் பிரேவிக் கைதுசெய்யப்பட்டார்.பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும்; தன்னைப்போல் 80பேர் ஐபோப்பாவில் இருக்கிறார்கள. எனவும் ஐரோப்பாவில் வெவ்வேறு இடங்களில் தாக்குதல்களை நடாத்துவதற்கு அவர்கள் தயாராகவுள்ளனர்.எனவும் பிரேவிக் பொலீஸாரிடம் தெரிவித்தார்.
'2083:ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடணம்.' என்ற பெயரிடப்பட்ட புத்தகத்தை பிரேவிக் உருவாக்கியதுடன்,நேர்வேயின் இரட்டைத்தாக்குதல்களுக்கு ஒரு மணித்தியாலத்திக்கு முன்னால்,அதனை 5700பேருக்கு மின்னஞ்சல் மூலம் அவர்அனுப்பியதாகவும்.செய்திகள் தெரிவிக்கின்றன.முஸ்லிம்களுடன் நீண்டகாலமாகப்பமைமைகொண்டிருந்த பிரேவிக்,ஐரோப்பாவை இஸ்லாமியமயமாக்கலில் இருந்து பாதுகாப்பதற்காகவே, தாம்இத்தாக்குதலை மேற்கொள்ளத் துணிந்தாகத் தெரிவித்தார். பிரேவிக்கின் இஸ்லாத்திக்கு எதிரான இனவெறித் தாக்குதலானது, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களான, பிரிடிஷ் பிரதமர் டோவிட் கமரூன்,பிரான்ஸ் ஜனாதிபதிநிகோலஸ் சாகோஸி,மற்றும் இத்தாலியின் பிரதமர் ஸில்வியோ பிரலஸ்கோணி போன்றவர்களின் கூற்றுக்களின் எதிரோலியாக காணப்படுகின்றது. மேலும் இத்தாக்குதலானது, அவர்களுக்கு,தமது நாட்டில் வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் இனவெறியை கைக்கொள்வதற்கு முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியஅடிப்படைவாதம் என்று அழைக்கும்,மேற்கு நாடுகள். தற்போது தமது நாட்டு மக்களிடையே பயங்கரவாதம் உருவாகியுள்ளதை நோக்கவேண்டியுள்ளது.என அரசியல் அவதானிகள்தெரிவிக்கின்றனர்.
0 Comments