துருக்கியில் புதிய இராணுவத்தளபதி நியமனம்.






துருக்கியின் புதிய இராணுவத்தளபதியாக ஜெனரல் நிஸ்டட் ஒதேல் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலானபாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ராஜினாமாவின் பின்னரே,இவர் நியமிக்கப்பட்டுள்ளார். துருக்கியின் ஜனாதிபதி அப்துல்லாஹ் குல், ஜெனரல் நிஸ்டட்டை இராணுவத் தளபதியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று நியமித்தாக துருக்கியின் உள்நாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்றுதுருக்கியின் ஆயுதப்படைத்தளபதி ஜெனரல் ஐசிக் குஸானர்,இராணுவத்தின் கட்டளைத்தளபதிகள்,விமாணப்படை உயர்;அதிகாரிகள்,கடற்படை உயர்அதிகாரிகள் போன்ற பல உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தமது பதவியை ராஜினமாச் செய்தனர். இதன்பின்னர் புதிய இராணுவத்தளபதியாக ஜெனரல் நிஸ்டட் ஒதேல் நியமிக்கப்பட்டுள்ளார்.






Post a Comment

0 Comments