ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் ஜுலை,22வெள்ளிக் கிழமையன்று, எகிப்தின் தலைநகர் கைய்ரோவில்பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்தில் நடைமுறையிலுள்ள பாதுகாப்பு விதிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுமாறு, தலைநகர் கைய்ரோவின் சுதந்திரசதுக்கத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஒன்றுகூடிய மக்கள்,எகிப்தின் முன்னால் சர்வஅதிகார ஆட்சியாளரான ஹூஸ்னிமுபாரக்கையும்,அவரது அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு அழைப்பவிடுத்தனர். மக்கள் தமது நோக்கங்களை அடையும்வரை,ஆர்பாட்டங்களில் தொடாச்சியாக ஈடுபடுமாறு கைய்ரோவில் வெள்ளிக்கிழமை தொழுகைகளை நடாத்திய இமாம் தெரிவித்துள்ளார். எகிப்தின் அரசியலமைப்பிலும்,பாராளுமன்றத்திலும் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். என மேலும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் மீது புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நடாத்தும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை,பொலீஸார் கொண்றுள்ளர். எனவும் பொலீஸார் மீது விசாரணைகள்நடாத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். முபாரக்கின் ஆட்சியின்போதிருந்த அதிகாரிகளைதற்போதும், அரசாங்கத்தில் வைத்திருப்பது ஆட்சரியமாகும்.எனவும் அவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப்பதிலாக பொதுமக்களிலிருந்து சிலரை அப்பொறுப்புக்களுக்கு நியமிக்கவேண்டும்.என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார். முபராக்கின் ஆட்சிகவிழ்க்கப் பட்டபின், எகிப்தின் பாதுகாப்புத்திணைக்களம் அந்நாட்டில் ஆட்சியை நடாத்துகின்றது. பாதுகாப்புத் திணைக்களமானது எகிப்தின்புரட்சியை தடம்புரளச் செய்ய முயற்சிப்பதாக, பெரும்பாலான எகிப்தியமக்கள் நம்புகின்றனர்.
0 Comments