காஸாவின் மீது இஸ்ரேல்தொடரும் தாக்குதல்கள்!




இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காஸாப்பகுதியில் இஸ்ரேலியப் பீரங்கியொன்று மேற்கொண்டதாக்குதலினால் ஏழு பலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.இது பலஸ்தீன பிரதேசங்களின் மீது5வது முறையாக இஸ்ரேல் மேற்கொண்ட திடீர்தாக்குதலாகும். காயமடைந்தவர்களுள்4சிறுவர்கள்அடங்குகின்றனர்.காஸாப்பகுதியில் இருந்து இஸ்ரேலின் தென்நகரங்களுக்கு ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டதாகவும், இஸ்ரேலின் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாகமே காஸாப் பகுதியின் மீது தாம் தாக்குதல்கள் மேற்கொள்வதாகவும் இஸ்ரேலின் சார்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமையன்றுமீட்புப்பணியில் ஈடுபட்ட குழுவொன்று பலஸ்தீனின் தென்பகுதிநகரான ரபா எல்லைக்கும், எகிப்திக்கும்இடையில் இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்பட்ட பலஸ்தீன இளைஞர் ஒருவரின் உடலைக் கண்டெடுத்தது. பலஸ்தீன காஸாப்பகுதியில் உள்ள சுரங்கங்களை இலக்குவைத்து பலமானஆயுதங்களைபயன்படுத்தி இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.2007ம் ஆண்டு பலஸ்தீனின் மீதுவிதிக்கப்பட்ட பொருளாதாரத்தடையின் போது அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கவே இச்சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.என்பது குறிப்பிடத்தக்கது.




இஸ்ரேல் கடந்த காலங்களில் காஸாவின் சுரங்கப்பகுதிகளில் மேற்கொண்ட தாக்குதல்களினால்,பலஸ்தீனமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன்,மேலும் பலர் காயமடைந்தனர்.இஸ்ரேல் தொடர்ச்சியாகபலஸ்தீனின் மீது மேற்ககொள்ளும் தாக்குதல்களை முடிவிக்குக் கொண்டுவருமாறு ஐக்கிய நாடுகள்சபைக்கு லெபனான் பிரதமர் நஜீப் மிகாதீ அழைப்புவிடுத்துள்ளார்.2006ம் ஆண்டு இஸ்ரேல் லெபனான்மீது மேற்கொண்ட போரின் 5ஆண்டுகள் நிறைவையொட்டி லெபனான் பிரதமர், தென்லெபனான்பகுதிக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போதே இதனை அவர் தெரிவித்தார். தென்லெபனான் மீது2006ம் ஆண்டு,இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தமானது 33நாட்கள் நீடித்ததுடன்,இந்த யுத்தத்தின் போது1200 லெபானானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.மேலும் இப்போரில் இஸ்ரேலானாது பாரியதோல்வி அடைந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.




இஸ்ரேல் தொடாச்சியாக காஸாவின் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களினால்,எம்பலஸ்தீனஉறவுகள்ஷஹீதாக்கப்படுகின்றனர்.எனவே நாம் எமது பலஸ்தீன உறவுகளுக்காக அன்றாடம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.! 

Post a Comment

0 Comments