ஐரோப்பியயூனியன் நாடுகள்பலவற்றில் நடாத்தப்பட்ட கூட்டத்தொடர்கள், ஒன்றுகூடல்களின்பின்னர்,பலஸ்தீனை சுதந்திரநடாகப் பிரகடணப்படுத்தும்முகமாக, சுதந்திர பலஸ்தீனுக்கான இயக்கம் செப்டம்பர்மாதம் 15ம்திகதிக்குள், ஒருமில்லியன் கையொப்பங்களைத்திரட்டநடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர்மாதம் பெல்ஜியத்தின் தலைநகர் புருஸேல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பியயூனியன் பாராளுமன்றக்கூட்டுத்தொடருக்கு முன்பதாக,ஒருமில்லியன் கையொழுத்துக்களைக் கொண்ட மனுவை சுதந்திர பலஸ்தீனுக்கானஇயக்கம் ஐரோப்பிய யூனியனிடம் கையளிக்கவுள்ளது. ஐரோப்பியயூனியன் நாடுகளினது பராளுமன்றங்களில சுதந்திரப்பலஸ்தீனைப் பிரகடணப்படுத்துவதற்கான ஆதரவைப்பெறும் நோக்கில், ஐரோப்பியநாடுகளில் பொதுமக்களிடையே கையொப்பங்களைதிரட்டும் நடவடிக்கைகளில்,பலஸ்தீனுக்கான சுதந்திரஇயக்கம் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுதந்திர பலஸ்தீனின் தலைநகராக ஜெரூஸலத்தை குறிப்பிடுவதுடன், 1967இல் இஸ்ரேலால்கூறப்பட்ட எல்லைகள் அடங்கலாக சுதந்திர பலஸ்தீனை பிரகடணப்படுத்துவதற்கு ஆதரவைவழங்குமாறு,பலஸ்தீன சுதந்திரஇயக்கம் அழைப்புவிடுத்துள்ளது.
0 Comments