புனித ரமழானின் உம்ரா செய்பவர்களுக்கு உதவிபுரிவதற்காக 1600 இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.








இவ்வருட புனித ரமழான்மாதத்தில் உம்ராவுக்காகவரும் யாத்திரீகர்களுக்கு உதவிசெய்யும் நோக்கில்1600 இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். உங்களின் சேவைக்காக மக்காவின் இளைஞர்கள் என்ற நகழ்ச்சிதிட்டத்தின் கீழேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.புனித மக்கா நகருக்கு உம்ராவுக்காக செல்லும்யாத்தீர்களுக்கு தவாப்செய்ய கஷ்டப்படும் யாத்திரீகர்களை தள்ளுவண்டியில் இலவசமாக ஏற்றிச்செல்லல்,காணமல்போனவர்களுக்குஉதவிசெய்தல்,சனநெரிசல்களை கட்டுப்படுத்தல்,முதலுதவிகள் செய்தல் போன்ற வெவ்வேறான உதவிகளை செய்யும் நோக்கிலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இரு புனிதப்பள்ளிவாசல்களின் தலைமை அலுவலகம்,மக்கா பொலீஸ்,மக்கா போக்குவரத்து திணைக்களம் மற்றும் முதலுதவி சேவைகள் பிரிவு என்பன,இவ்இளைஞர்களுக்கு செயலமர்வுகளை நடாத்தி அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கியுள்ளன.




இவ்இளைஞர்கள் இலவசமாக உம்ரா யத்தீரிகர்களுக்கு உதவிசெய்வதன் மூலம், யாத்திரீகர்ள் அதிகமாகநன்மையடைவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததார்.கடந்த வருடங்களில் உம்ராக்கிரியையின் போது இவ்இளைஞர்கள் சிறந்தமுறையில் தமது கடமைகளை நிறைவேற்றினர். இதன் மூலம் அவர்கள் யாத்திரீகர்களிடம் நன்மதிப்புப் பெற்றனர் என அவ்அதிகாரி மேலும் தெரிவித்தார்.




Post a Comment

0 Comments