200வருடங்கள் பழமைவாய்ந்த கஃபாவின் கிஸ்வாதுணி ஐக்கியஅரபுராச்சியத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.






200வருடங்கள் பழமையான,கஃபாவிக்கு அணிவிக்கப்படும் கி;ஸ்வா துணியை அபுதாபி இஸ்லாமிய வங்கிவாங்கியுள்ளது. ஐக்கியஅரபுராச்சியத்தில் புனித ரமழானை அடையாளப்படுத்தும்படியாக இக்கிஸ்வா துணியானது காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்கிஸ்வா துணியானது பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. பல்வேறுபட்ட இஸ்லாமிய கலைஅம்சங்களுடன்,குர்ஆனின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு மிக நுண்ணிய முறையிலேயே கிஸ்வாத்துணி உருவாக்கப்படுகின்றது.


கிஸ்வா துணியானது முதன்முதலில் 3வதுசுல்தான் சேலீம்(1789-1807) காலத்திலேயே உருவாக்கப்பட்டு கஃபாவிக்கு அணிவிக்கப்பட்டது. ஒட்டோமன் பேரரசு காலத்து கலைஅம்சங்களுடன் இக்கிஸ்வா துணியானது உருவாக்கப்பட்டது.கிஸ்வாத்துணியானது ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படுகின்றது.மேலும்கிஸ்வா துணியானது ஒவ்வொரு வருடத்தினதும் துல்கஃதா மாதத்தில் மாற்றப்படுகின்றது.

Post a Comment

0 Comments