இப்புனித ரமழான் மாதத்தில் குர்ஆனிய மற்றும் கலாசார வாரங்கள் 40ற்கும் அதிகமான நாடுகளில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக, இஸ்லாமிய கலாச்சார மற்றும் உறவுகளுக்கான அமைப்பு(ICRO) தெரிவித்துள்ளது.புனித அல்குர்ஆனானது, முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை,மதிப்பு,பலம் என்பவற்று முக்கியகாரணியாகக் காணப்படுகின்றது. மேலும் ரமழானானது புனிதஅல்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும்.எனவே புனித அல்குர்ஆனைப் பற்றிய பல நிகழ்ச்சிகளை,பல உலகநாடுகளில் நடாத்த தாம் ஒழுங்கு செய்துள்ளதாக ICRO இன் தலைவர் தெரிவித்ததார்.புனித குர்ஆனின் மூலம் இஸ்லாமியஒற்றுமை கொண்டுவர தாம்எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 29குர்ஆனிய வாரங்கள் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுவீடன்,ஐக்கியராச்சியம், கனடா,ரஷ்யா,துருக்கி,பாகிஸ்தான்,மலேசியா,டியூனிசியா,பிரான்ஸ் மற்றும் கென்யா போன்ற நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் குர்ஆனிய எழுத்தணி,மற்றும் வேறுபட்ட குர்ஆனிய கலைஅம்சங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.துருக்கியில் நடைபெறவுள்ள நிகழச்சியை,அந்நாட்டின் குறித்தவோர் கூட்டுத்தாபனத்துடன்இணைந்து நடாத்தப்படவுள்ளது. மலேசிய மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் வெவ்வேறுபட்டநகரங்களில் இந்நிகழச்சிகள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மலேசியாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஒப்பற்ற குர்ஆனிய வசனங்கள் பொறிக்கப்பட்ட விரிப்பு ஒன்றும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இந்நிகழச்சிகளை நடாத்துவதன் மூலம், ரமழானை புனித அல்குர்ஆனை ஓதும்,படிக்கும் மாதமாக மாற்றமுடியும்.என எதிர்பார்க்கப்படுகின்றது.
1 Comments
yes., that's right.
ReplyDeleteAllah give you the best.....