பலஸ்தீனின் நபுலுஸ் மாகாணத்தில் உள்ள ஜாலூத் எனும் கிராமத்திக்கு, ஸியோனிச குடியிருப்பாளர்கள் தீவைத்துள்ளனர்.இதனால் அக்கிராமத்தின் பெரும்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. இக்கிராமத்தின்விவசாய நிலங்கள்மீதே ஸியோனிச குடியிருப்பாளர்கள் தீவைத்தாக, பலஸ்தீனின் மேற்குக்கரைப்பகுதியின் சட்டவிரோதக் குடியிருப்புக்களுகளை எதிர்க்கும் அமைப்பின் தலைவர் கஸான் டக்லஸ் தெரிவித்துள்ளார்.இந்நிலப்பகுதியின் தீயை அணைப்பதற்காக, பலஸ்தீனின் தீயணைப்புப்படையினர் பலமணித்தியாலங்கள் ஈடுபட்டனர். எனினும் பெரிய நிலப்பகுதி தீக்கிரையானதாக அவர் மேலும் தெரிவித்தார். விவசாயநிலப்பகுதிகள் தீக்கிரையானதன் மூலம், விவசாயிகள் பாரியபிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னால், பலஸ்;தீனின் ஒரு பகுதியில் ஏறத்தாள 150 ஜைத்தூன்மரங்களை ஸியோனிச இராணுவம் அழித்தது. பலஸ்தீனின் விவசாய நிலங்களை அழிப்பதன் மூலம்,பலஸ்தீனின் பொருளாதாரத்தை முற்றாக கீழ்நிலைக்குக் கொண்டுவருவதே இஸ்ரேலின் நோக்கமாகவுள்ளது. எனவே நாம் எமது பலஸ்தீன உறவுகளுக்காக, இப்புனித ரமழானில் அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்திப்போம்.
0 Comments