இத்தாலியில் புர்காகவிற்கு சிவப்புக்கொடி.!!


             


இத்தாலிப் பாராளுமன்றம ஆணைக்குழு புர்காத் தடைச்சட்டத்திற்கான நகல் சட்டமூலத்துக்கு அங்கீகாரம்வழங்கியுள்ளது.பொதுஇடங்களில் முஸ்லிம்பெண்கள் புர்கா அணிவதை தடைசெய்யும் நோக்கிலேயே இச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் சில தசாப்த காலங்களுக்கு முன்னேயே பிரேரிக்கப்பட்டு இருந்தது. எனினும் சில நாட்களுக்கு முன்னேயே இச்சட்டமூலத்துக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.புர்காத் தடைச் சட்டமூலமானது பாதுகாப்புக் காரணங்களுக்காவே கொண்டுவரப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொது இடங்களில் புர்கா அணிபவர்களுக்கு 100 முதல் 300 வரையான யூரோக்கள் தண்டமாக அறவிடப்படும்.  மேலும் பொது இடங்களில் புர்கா அணியுமாறு அழுத்தம் கொடுத்து,அதனை நடைமுறைப் படுத்துபவர்களுக்கு 30,000யூரோக்கள்(45,000 அமெரிக்கடொலர்கள்) தண்டமாக அறவிடப்படுவதுடன்,ஒரு வருடசிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




இத்தாலியானது கிறிஸ்தவர்களைப் பெருன்பான்மையாகக்கொண்ட நாடாகும். இங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.புர்கா தடைச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ள 3வது ஐரோப்பியநாடாக இத்தாலி காணப்படுகின்றது.ஏற்கனவே பிரான்ஸ்,பெல்ஜியம் போன்ற நாடுகள் புர்கா தடைச்சட்டத்தைநடைமுறைப் படுத்தியுள்ளன.இத்தாலியின் பிரதமர் பிரலஸ்கோனியின் கன்ஸர்வேடிவ் சுதந்திர மக்கள்கட்சியே புர்கா தடைச்சட்டத்துக்கான சட்டமூலத்தை பாரளுமன்றத்தில் கொண்டுவந்தது. இக்கட்சியில் அங்கத்துவம்வகிக்கும் மேரோக்கோவைப் பூர்வீகமாகக் கொண்டவரான ஸூவாத் ஸபி என்பவரே இச்சட்டமூலத்தை கொண்டுவந்தார்.ஐந்து வருடங்களுக்கு முன்னதாக இத்தாலியில் எவரும் புர்கா அணியவில்லை.என்றும் தற்போது இத்தாலியில் அதிகமானவர்கள் புர்கா அணிவதாகவும்,முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை நீக்கி அவர்களுக்கு உதவிசெய்யும் நோக்கிலேயே இச்சட்டமூலத்தை தாம்கொண்டுவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.புர்கா அணிவது முஸ்லிம் பெண்களின் தொண்டுதொட்டுவரும் பழக்கங்களில் ஒன்றாகும் எனவும் அதனைத் தடைசெய்ய முடியாது என்றும் இத்தாலியின் இஸ்லாமிய ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும் இத்தாலியின் முக்கிய எதிர்க்கட்சியானது இச்சட்டமூலத்துக்கு எதிராகவே வாக்களித்தது. ஐரோப்பிய நாடுகளின் அரசியல்தலைவர்கள் தமது அரசியல்இருப்பை தக்கவைத்துக்கொள்ள இஸ்லாமியஎதிர்ப்பை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Post a Comment

0 Comments