பலஸ்தீனின் மஸ்ஜிதுல்அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்ற புனித ரமழான்மாதத்தின் முதல் ஜூம்ஆத்தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்;துகொண்டனர்.இந்த வருடத்தின் புனித ரமழான்மாதத்தின் முதல் ஜூம்ஆத் தொழுகையானது உலகநாடுகளில் நேற்றுநடைபெற்றது. முஸ்லிம்களின்3வது புனிதஸ்தலமாக பலஸ்தீனின் மஸ்ஜிதுல் அக்ஸாப் பள்ளிவாசல் காணப்படுகின்றது.நேற்று பலஸ்தீனின்புனித மஸ்ஜிதுல் அக்ஸாப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜூம்ஆ தொழுகையில் பல்லாயிரக்கணக்கானபலஸ்தீன மக்கள் கலந்துகொண்டனர். இதனால் பெரும்தொகையான இஸ்ரேலிய வீரர்கள் புனிதஜெரூஜலம்நகரம் முழுதும் குவிக்கப்பட்டிருந்தனர்.ஜெரூலம் நகரத்தின் வெவ்வேறு பாதைகளில் வீதிநிறுத்தக் கடவைகள் வைக்கப்பட்டிருந்ததுடன், இளைஞர்கள்நிறுத்தப்பட்டு அவர்களிடம் இஸ்ரேலியஇராணுவம் சோதனை நடாத்தினா. 40வயதுக்கு குறைந்தவர்களுக்கு அல்-அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள கடவைகளின்பின்னாலே தொழ அணுமதிவழங்கப்பட்டதுடன், 40வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் சென்று தொழவதற்கு அணுமதி வழங்கப்பட்டடது.
தற்காலத்தில் புனித ஜெரூஸலம் நகரானது,இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது.எனினும் அல்அக்ஸா பள்ளிவாசலானது பலஸ்தீன இஸ்லாமிய வக்ப் அமைப்பின் நிர்வாகத்தின்கீழேயே இயங்குகின்றது. தற்போது இஸ்ரேலிய அரசு அகழ்வாராய்ச்சியென்ற பெயரில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் நிலப்பகுதிகளை தோண்டி,புனித அக்ஸா பள்ளிவாசலின் அத்திவாரத்தை நலிவடையச்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது. இந்நடவடிக்கைக்கு பலஸ்தீனப்பிரதமரும் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியதலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹானிய்யா, அண்மையில் கண்டனம்தெரிவித்ததுடன், இஸ்ரேலின் இக்கீழ்தரமான நடவடிக்கைக்கு எதிராக பலஸ்தீன மக்களுக்கு ஒன்றுபடுமாறும் அழைப்புவிடுத்தார். மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலானது பலஸ்தீனமக்களுக்கு மற்றும் சொந்தமானது அல்ல,மாறாக எமது முழு முஸ்லிம் உம்மத்திக்கும் சொந்தமானதாகும். எனவே இப்புனித ரமழான் மததத்தில்எமது முழு முஸ்லிம் உம்மத்தின் சொத்தான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காவும்,எமது பலஸ்தீன் உறவுகளுக்காகவும் வல்லநாயான் அல்லாஹ்விடம் பிரார்திப்போம்.
0 Comments