ஜெரூஜலம் நகரானது யூதர்களுக்கு சொந்தமானது என்பதற்கான வரலாற்றுஆதாரங்கள் எதுவுமில்லையெனஇஸ்ரேலின் முக்கியதொல்பொருளியலாளர் ஒருவரான வங்க்லிஸ்டீன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.வங்க்லிஸ்டீன் பலஸ்தீன நிலப்பகுதிகள் பற்றிய ஆய்வின் தந்தையாகக் கருதப்படுகின்றார். ஜெரூஜலம் நகரானது யூதர்களுக்கு சொந்தமானது என்பதற்கான வரலாற்றுஆதாரங்கள் எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளதுடன் ,யூதர்கள் ஜெரூஜலம் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் எனவும் பின்னர் அவர்கள் ஸினாய் பாலைவனத்தில் அழைந்துதிரிந்தனர் எனவும்அதன்பின்னர் யூதர்கள்,ஜூஸாவின் மகனான நூன் உடன் நடைபெற்ற யுத்தததில் வெற்றிபெற்று பலஸ்தீனமேற்குப் பகுதியை கைப்பற்றினர். எனவும் கூறப்படும் வரலாற்றுக்கதை ஆதாரமற்றது என வங்க்லிஸ்டீன் தெரிவித்தார்.
இஸ்ரேலினால் ஏற்கனவே கூறப்பட்டதுபோல்,ஹாய்ஸல்வான்பகுதியில் 6வாரங்கள் நiடைபெற்ற தொல்பொருள்ஆய்வின் போதும்,உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென, டெல்அவிவ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பேராசிரியரான ரபேல்கிரீன்போக் தெரிவித்துள்ளார்.மேலும்அல்-ஆத் எனும் வலதுசாரி அமைப்பு பெரியளவிலான தொல்பொருளியல் ஆய்வில் தற்போது ஈடுபட்டுவருகின்றது.ஆனால் இதுவரை அவர்கள் உறுதியான ஆதாரங்களை கண்டுபிடிக்கவில்லை என இஸ்ரேலின் புகழ்பெற்ற தொல்பொருளியலாளர் ஒருவரான யூனி மஸ்ஹரி தெரிவித்துள்ளார். புனித குத்ஸ் அமைந்துள்ள இடத்தில் ஹாய்ஸல்வான்பகுதியில் பாரிய யூதக்கோவில் ஒன்றைஅமைக்க 2008ம் ஆண்டுமுதல் இரகசியதிட்டமொன்று இடம்பெறுதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜெரூஸலமானது யூதர்களின் சொந்தபூமி என்பதை நிரூபிக்க, ஸியோனிச அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றது.
0 Comments