உஸ்பெகிஸ்தான் எட்டு கிறிஸ்தவமதகுருமார்களை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது.






உஸ்பெகிஸ்தான்,மத்திய ஆசியாநாடுகளை சேர்ந்த அமெரிக்கா பிரஜைகளான எட்டு கிறிஸ்தவமதகுருமார்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.உஸ்பெகிஸ்தான் நாட்டுபிரஜைகளை சட்டரீதியற்றமுறையில் கிறிஸ்தவமதத்திக்கு மதம்மாற்ற இவர்கள் முயன்றுள்ளனர்.இவர்களில் சிலர் தொழிலாளர்களாகவும்,மற்றவர்கள் ஆசிரியர்களாகவும் செயற்பட்டுள்ளனர்.இவர்கள் உஸ்பெகிஸ்தான் மாணவர்களிடம் கவர்ச்சியாக நடந்துகொண்டு,அவர்களை சட்டரீதியற்றமுறையில் கிறிஸ்தவமதத்திக்கு மாற்றஇம்மதகுருமார்கள் முயற்சித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.


உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தஸ்கேன்டிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இச்சம்பவத்தை பற்றி கருத்தேதும் வெளியிடவில்லை.இதற்குமுன் உஸ்பெகிஸ்தானில்மதமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒர்அமெரிக்கப்பிரஜையும்,7தென்கொரியப்பிரஜைகளும் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர்.மதமாற்று நடவடிக்கைளில் ஈடுபவதற்கு உஸ்பெகிஸ்தானில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.உஸ்பெகிஸ்தானானது 90வீதம் முஸ்லிம்களைக்கொண்ட நாடாகும்.மேலும் அங்கு 28மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.





Post a Comment

0 Comments