புரூனையின் தாருல் இஸ்லாம் இஸ்லாமியநியைத்தில்,இஸ்லாமிய இலத்திரனியல்வாசிகசாலைஆரம்பிக்கப்படவுள்ளது.இணையப்
பாவனையாளர்களுக்கு,இணையத்தின்மூலம் இஸ்லாமியக்கல்வியை வழங்கும் நோக்கிலேயே இவ்இலத்திரனியல் வாசிகசாலை அமைக்கப்படவுள்ளது. புரூனையின் பிரதமர்அலுவலகத்தின் பத்வா நிலையத்தின் அணுசரனையில் இவ் இஸ்லாமியஇலத்திரனியல் வாசிகசாலையானது அமைக்கப்படவுள்ளது. மேலும் இவ்வாசிகசாலையை அமைக்க,புரூனையின் இலத்திரனியல் நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன்,இஸ்லாமிய இலத்திரனியல் வாசிகசாலை இம்மாதத்திலேயேஆரம்பிக்க எதிர்பாக்கப்டுவதாகவும் அந்நாட்டு செய்தியென்று தெரிவிக்கின்றது.
இலத்திரனியல் இஸ்லாமிய வாசிகசலையின் மூலம் இணையப் பாவனையாளர்கள் மிகவும்நன்மையடையவுள்ளனர் என பத்வா நிலையத்தின் தலைவர் தெரிவித்தார். புரூனையில் அமைக்கப்படவுள்ள இஸ்லாமிய இலத்திரனியல் வாசிகசாலையானது நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்கதோர் பங்களிப்பை வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும்தெரிவித்தார்.அமைக்கப்படவுள்ள இஸ்லாமிய இலத்திரனியல் வாசிகசாலையானது பொதுமக்களின் பாவனைக்காக வழங்கப்படவுள்ளது.
0 Comments