எகிப்தின் அரசியல்தலைவர்கள் நாட்டின் அரசியல்யாப்பின் கொள்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.








எகிப்தின் அரசியல்தலைவர்கள் மற்றும்அரசியல்கட்சிகளின்பிரதிநிதிகள் நாட்டின் அரசியல்யாப்பின் அதிகாரப்பத்திரக்கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையொன்றை இன்று வியாழக்கிழமை எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நடாத்தியுள்ளனர் எகிபதின் அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடுகள் காணப்படவேண்டியதுடன், எகிப்தின் அரசியல்சக்தியின் மூலம் தேசியஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமெனவும் இப்பேச்சுவர்த்தையின் போது ஷேய்குல்அஸ்ஹர் கலாநிதிஅஹமத் அல்தையிப் தெரிவித்தார். எகிப்தில் ஜனவரிமாதம் இடம்பெற்ற மக்கள்புரட்சிக்குப் பின்னர், எகிப்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையொன்று,கடந்த ஜூன்மாதம் இஸ்லாமியஉலகின் தலைசிறந்தகல்விக்கூடமான அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டது. எகிப்தின் ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.எகிப்தின் அதிகமான அரசியல்கட்சிகள்மற்றும் அரசாங்கம் என்பன அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 


இதேவேளை வேறுசிலஅரசியல்கட்சிகள் இதற்கு தமதுஎதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்,ஏனெனில் அரசியல்யாப்பு கொள்கைகள் தொடர்பான கூட்டத்தில்,பேச்சுவார்த்தைகள் நடாத்ததமக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லையெனத் தெரிவித்து,இக்கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.









Post a Comment

0 Comments