எகிப்தின் முன்னால் ஜனாதிபதி ஹூஸ்னிமுபாரக் நீதிமன்ற விசாரணைகளுக்காக எகிப்திக்குஇன்று திந்கட்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரிமாதம் மக்கள்புரட்சியின் மூலம் ஹூஸ்னிமுபாரக் பதவிகவிழ்க்கப்பட்டார். நோய்வாய்ப்பட்டள்ள அவர் ஒரு ஹெலியின்மூலம் கொண்டுவரப்பட்டு,அம்பியூலன்ஸ் வண்டியின்மூலம் நீதிமன்ற விசாரணைகளுக்காக கைய்ரோ நீதிமன்றத்திக்கு கொண்டு வரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எகிப்தில் நடைபெற்ற மக்கள்புரட்சியின்போது, 850சமாதான ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுகொள்ளுமாறு கட்டளையிட்டதாக, முபாரக்கின்மீது தொடர்ந்து எகிப்திமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். விசாரணை நடைபெறவுள்ள நீதிமன்றத்தின் முன்னால் ஒரேவகையான உடைதரித்த 150முதல்200 வரையான முபராகிக்குஎதிரான ஆர்பாட்டக்காரர்கள் '30வருடங்கள் எகிப்தை ஆட்சிசெய்தவரை மதிக்கவேண்டாம்"என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியவர்களாக காணப்படனர் என சர்வதேசஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
83வயதான முன்னால் எகிப்திய ஜனாதிபதியான ஹூஸ்னிமுபராக் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக,எகிப்திய மக்கள் புரட்சியின் போது பொதுமக்களை கொல்வதற்கு காரணமாகவிருந்தார் என அவர்மீது குற்றம்சாட்டப்பட்டள்ளது. பொதுமக்களை கொலைசெய்வதற்கு காரணமாகவிருந்தார் என்பதன் பெயரில் எகிப்தின் முன்னால் உள்நாட்டு அமைச்சருக்கும்,ஆறு முன்னால் பொலீஸ்அதிகாரிகளுக்கும் ஏற்கனவே 17வருடசிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
0 Comments