81வீதான அமெரிக்கமக்கள் அந்நாட்டு அரசாங்கத்துடன் அதிருப்தியடைந்துள்ளனர்.






அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி அதிகமான அமெரிக்கமக்கள்அந்நாட்டு அரசாங்கத்துடன் அதிருப்தியடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்காவின் தன்னார்வநிறுவனமொன்று இக்கணிப்பீட்டை மேற்கொண்டது.81வீதமான அமெரிக்கமக்கள் அரசாங்கம், நாட்டை வழிநடத்திமுறையில்அதிருப்தியடைந்துள்ளர் என இக்கணிப்பீடு தெரிவிக்கின்றது.அமெரிக்காவின் 1017பேரிடம் தொலைபேசி உரையாடல்களின்மூலம் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.இவர்களில் 65வீதமான ஜனநாயகஆதரவாளர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால்அதிருப்தியடைந்துள்ளதுடன்,மேலும் 92வீதமான குடியரசுஆதரவாளர்கள் அமெரிக்காவின் அரசியல்யாப்பை நிராகரித்துள்ளனர்.




இதேவேளை கடந்த செப்டம்பர்மாதம் 19ம்திகதி வெளியிடப்பட்ட ஓர்ஆய்வில் 51வீதமான அமெரிக்கபிரஜைகள் ஒவ்வொருடொலருக்கும் வரிசெலுத்துகின்றனர் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.2003ம்ஆண்டு ஈராக்மீது அமெரிக்க மேற்கொண்ட யுத்தத்தின்மூலம்,பாதுகாப்புச்செலவினங்கள் அதிகரித்தமைக்கு அதிகமான அமெரிக்கமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என என இவ்வாய்வில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments