கிரேக்கத்தின் ஏதேன்ஸ்நகரில் முதலாவதுபள்ளிவாசலைஅமைக்க அந்நாட்டுப் பாராளுமன்றம் அஙகீகாரம்.!










கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸில் முதலாவது சட்டரீதியான பள்ளிவாசலை அமைப்பதற்கு அந்நாட்டுப்பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.35வருடங்களாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களுக்கு ப்பின்னரே,ஏதன்ஸில் சட்டரீதியான முதலாவது பள்ளிவாசலை அமைப்பதற்கான அரசாங்கத்தின்அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. கிரேக்கத்தலைநகர் ஏதேன்ஸில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். பல்லாயிரகக்கணக்கான முஸ்லிம்கள் சனத்தெகையைக்கொண்ட ஏதேன்ஸ்நகரில், அவர்களுக்கு ஓர்பள்ளிவாசலை அமைப்பதற்கான பிரேரணை கிரேக்கப் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.இப்பிரேரணைக்கு ஆதரவாக 198வாக்குகளும், எதிராக 19வாக்குகளும்அளிக்கப்பட்டிருந்தன. இவ்வாக்கெடுப்பில் பொதுவாக எல்லாக்கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.ரைட்-விங் எனும் (இனவாத) அரசியல்கட்சியானதுஇவ்வாக்கெடுப்பில்கலந்துகொள்ளவில்லை.
'ஏதென்ஸின் மத்தியபகுதியில் பயங்கரவாதிகளைஉருவாக்கும் ஒரு நிலையத்தைஅமைக்க அரசு ஆதரவுவழங்குகின்றது.'என அவ்இனாவதக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.




இரண்டு இலட்சம் முஸ்லிகளைக்கொண்ட நகரில் ஒருபள்ளிவாசல்கூட இல்லாத நகராக ஐரோப்பியநாடுகளில் கிரேக்கத்தின் ஏதேன்ஸ்நகரம் மாத்திரமே காணப்படுகின்றது. ஏதென்ஸ்நகரில் தொழில்செய்யும் மற்றும்; வாழ்நதுவரும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு சட்டரீதியான ஒருபள்ளிவாசல்கூட இல்லை என்பதை அந்நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.ஏதேன்ஸ் முஸ்லிம்கள் இதுவரைகாலமும் வாடகைக்கட்டிடங்களில் பள்ளிவாசல்களை அமைத்து தமது வணக்கங்களில் ஈடுபட்டுவந்தனர்.எனினும் இப்பள்ளிவாசல்கள் அடிக்கடிஇனவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகிவந்ததன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments