முஸ்லிம் சமாதானமகாநாடு பயங்கரவாதத்திற்குக் கண்டனம் தெரிவிப்பு.







நேற்று சனிக்கிழமை லண்டன்நகரின் வீம்ப்லிஎரீனாப்பகுதியில் "மனிதாபிமானத்துக்கானசமாதானம்" எனும் தொனிப்பொருளில் சமாதான மகாநாடொன்று நடைபெற்றது.இம்மகாநாட்டில் 12,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.சமகாலஇஸ்லாமிய அறிஞர்களில் பிரலபலமாவரும்,மின்ஹாஜூல்குர்ஆன் அமைப்பின் ஸ்தாபகருமான கலாநிதி முஹம்மத் தாஹிர்உல்காதிரியின் தலைமையில்,இச் சமாதான மகாநாடானது நடைபெற்றது.செப்டம்பர் 11 தாக்குதல் முதல்,10வருடகால தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு இம்மகாநாட்டில் அவர்அழைப்புவிடுத்தார்.கலாநிதி தாஹிர்உல்காதிரி அவர்கள் கடந்தவருடம் பயங்கரவாதம்மற்றும் தற்கொலைக்குண்டுத்தாக்குதலிற்கு எதிரான பத்வாவை வழங்கினார்.




இம்மகாநாட்டில் அதிகமான இஸ்லாமியஅறிஞர்கள் கலந்துகொண்டனர். மேலும்இம்மகாநாட்டின் போது சமாதானத்தைவேண்டிப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.ஐக்கியராச்சியத்தின் பலபகுதிகளில் இருந்து மக்கள் ,இச்சமாதான மகாநாட்டில் கலந்துகொள்வதற்கு வருகைதந்திருந்தனர். 






Post a Comment

0 Comments