டமஸ்கஸ் நகரின் மீது முதலாவது ரொக்கட்தாக்குதல் நடாத்தப்பட்டதிலிருந்து,6மணிநேரத்துக்குள் மத்தியகிழக்கின் குறித்த சில நாடுகள் மீது கடுமையான தாக்குதல்நடாத்தப்பட்டு,ஆட்சியை வீழ்த்துவோம் என சிரியாவின் ஜனாதிபதி பஸர் அல்அஸாத்
தெரிவித்துள்ளார்.துருக்கியின் வெளிநாட்டுஅமைச்சு தூதுக்குழுவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றகலந்துரையாடலின் போது அஸாத்,இதனைக்கூறியதாக துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேற்குநாடுகளின் பின்னணியில்லிபியாவில் நடைபெற்றுவரும் கிளர்ச்சியைப்போன்று,தமது நாட்டிலும் கிளர்ச்சியைத் தூண்ட சில மேற்குநாட்டுச்சக்திகள் முயற்சித்தவருவதாகவும்,தமது நாட்டில் முதலாவது ரொக்கட்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், குறிப்பிட்ட சில மத்தியகிழக்குநாடுகளின் எண்ணெய்கிணறுகள் அருகே குண்டுகள் வெடிக்கும் என பஸர் அல்அஸாத குறிப்பிட்டதாக,செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்,டமஸ்கஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்,குலான் குன்றுகளை நோக்கியும்,இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவை நோக்கியும் நூற்றுக்கணக்கான ரொக்கட்தாக்குதல் நடாத்தப்படுமெனவும், இஸ்ரேலிக்கு எதிராக தாக்குதல் நடாத்துவதற்கு ஹிஸ்புல்லா அமைப்பை தாம் பணிப்பதாகவும் அஸாத் தெரிவித்தார்.
0 Comments