சவூதிஅரேபியா அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.






சவூதிஅரேபியாவின் கிழக்குப்பகுதிபகுதியில் அந்நாட்டு அரசாங்கத்துக்கெதிரானஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.அரசுடன் கருத்துவேறுபாடுள்ள அரசியல்கைதிகளை விடுவிக்குமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.இதனால்கிழக்குப்பகுதி மகாணங்களான அவாமியா மற்றும் காதிப் போன்ற இடங்களில் அரசபடைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசபடையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதனால் பெண்கள் அடங்களாக அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்தனர். பஹ்ரைனில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக சவூதிஅரேபிய படைகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்நடவடிக்கைகளை, இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்தனர்.




கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று,காதிப்பகுதியின் பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் அரசியல்கைதிகளை விடுதலைசெய்யுமாறுகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது பொலீஸார் மேற்கொண்ட தாக்குதலினால் தாம் காயமடைந்தாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.கடந்தஒரு மாதத்துக்கு முன்னால் சவூதிஅரேபியாவின் கிழக்குப்பகுதியில், அந்நாட்டுஅரசாங்கத்துக்கு எதிராக பலதடவைகள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments