மத்தியஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் தஜ்கிஸ்தானில் திறந்துவைப்பு.






மத்திய ஆசியாவின் மிகப்பெரியபள்ளிவாசல் தஜ்கிஸ்தானில் கடந்த செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.இப்பள்ளிவாசலில் ஒரேநேரத்தில் ஒருஇலட்சத்தி ஐம்பதாயிரம் பேருக்கு தொழக்கூடிய வசதி காணப்படுகின்றது.இப்பள்ளிவாசலுடன் சோந்த கட்டிடடமானது 7.5ஹெக்டயர் விசாலமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் உள்ள மினாராவானது 65மீற்றர் உயரத்தைக் கொண்டுள்ளதுடன்,இதன் குப்பாவானது 47மீற்றர்உயரத்தையுடையது. இம்மஸ்ஜிதை கட்டிமுடிக்க 100மில்லியன் அமெரிக்கடொலர்கள் செலவானதுடன்,இதில்70மில்லியன் அமெரிக்டொலர்களை கட்டார் அரசாங்கம்நன்கொடையாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.




தஜ்கிஸ்தானானது மத்தியஆசியாவின் ஓர் முஸ்லிம்நாடு என்பதுடன்,இங்கு 98வீதமானமக்கள், அதாவது 7.5மில்லியன் மக்கள் முஸ்லிம்கள் ஆவர்.

Post a Comment

0 Comments