பின்லாந்தின் பொதுப்பாடசாலைகளில் முதன்முறையாக உத்தியோகபூர்வ இஸ்லாமியப் பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.முதலாம,இரண்டாம்தர மாணவர்களுக்கு 'ஸலாம் - இஸ்லாமிய வழிமுறை" என்ற புத்தகம் உருவாக்கப்பட்டள்ளதுடன் நடுத்தர மற்றும் உயர்தரமாணவர்களுக்கான புத்தகங்கள்உருவாக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்லாந்தில்அதிகமான பொதுப்பாடசாலைகளில் ஏற்கனவே இஸ்லாம் ஒரு பாடமாக போதிக்கப்பட்டு வருகிறது.ஆனாலும் இதுவரை அதற்கான சிறந்த பாடப்புத்தகங்கள் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது உருவாக்கப்பட்டள்ள இப்புத்தகங்களில் இஸ்லாமிய வருட நாட்காட்டி(கலன்டர்), இஸ்லாமியப்பழக்கவழக்கங்கள் மற்றும் இஸ்லாமியச்சம்பிரதாயங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலும் அடுத்துமதங்கள்,மற்றவர்களுடன் பொறுமையோடுநடந்துகொள்வதுபற்றியும் குறிப்பிடப்பட்டிருகின்றது.
3,4,5,6,7ஆம் தரங்களுக்கான பாடப்புத்தகங்கள் இவ்வருட டிசம்பர் பகுதியில்வெளியிடப்படுமெனவும்,உயர்தர மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அடுத்தவருடம் வெளியிடப்படுமெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments