எகிப்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறைகள் தொடர்பில் எகிப்தின் தலைமை முப்தியும், உலகப்புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி அலி ஜூம்ஆ முஹம்மத் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்லாத்துக்கு எதிரான இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சிகள் தொடர்பிலும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இஸ்லாத்தின் பார்வையில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது தடைசெய்யப்பட்டதாகும்.முஸ்லிம்களை பிளவுபடுத்த எதிரிகள் முயன்றுவருகிறார்கள்.முஸ்லிம்களின் ஒற்றுமை மீது இவர்கள் இலக்கு வைத்துள்ளதாகவும்,உயிருக்கு ஆபத்தான இலக்குகளை அடைந்துகொள்ளவும் எதிர்பாக்கின்றார்கள் எனவும் கலாநிதி அலிஜூம்ஆ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென்றும், இஸ்லாத்திக்கு எதிரான கொள்கைள்,அவர்களது இலக்குகளை அடைந்துகொள்ள இடமளிக்கக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.எகிப்திய மக்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளை ஒற்றுமையின் மூலம் முறியடித்துள்ளதை வரலாறு சான்று பகர்கின்றது என அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மேலும் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் ஏனையமதத்தவர்களுக்கு சுதந்திரம் வழங்குவதை இஸ்லாம் வலியுறுத்துவதாகவும் எகிப்தின் தலைமை முப்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments