இஸ்ரேல் அணுவாயுத் திறனை மேம்படுத்தவுள்ளது.அழிவுதரும் அணுவாயுத உற்பத்தியைக் குறைப்பதற்கான உலகநாடுகளின் அமைப்பின் ஒப்பந்தங்களிற்கு தனது எதிர்ப்பைத்தொடர்ந்து இஸ்ரேல் காட்டிவருகின்றது.300க்கும் அதிகமான அழிவுதரும்
அணுவாயுதங்களை இஸ்ரேல் வைத்திருப்பதாக பரவலாக நம்பப்படுகின்றது.அழிவுதரும் அணுவாயுத உற்பத்தியைக் குறைப்பதற்கான உலகநாடுகளின்கோரிக்கைகளை இஸ்ரேல் எதிர்த்துள்ள அதேவேளை,சர்வதேச அணுசக்தி முகவர்நியைத்தின்(IAEA) அதிகாரிகளுக்கு,இஸ்ரேலின் அணுவாயுத ஆலைகளை
கண்காணிப்பதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளது.இஸ்ரேலிய அரசு,ஒரு தரைப்பகுதியிலிருந்துமற்றுமொரு நீண்டதூர தரைப்பகுதியைத் தாக்குக்கூடிய ஜேரிகோ-3 ரக ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும், மேலும் அவ்வாயுதத்தின்
உட்கட்டமைப்பின் திறனையும் மேம்படுத்தவுள்ளதாகவும் அமெரிக்கப் பாதுகாப்புத்தகவல் ஆணையகம்(BASIC) தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நீர்மூழ்கிக் கப்பலில் இருருந்து தாக்கக்கூடியவாறு நடுத்தர வகையைச்சேர்ந்தஏவகணைகளை இஸ்ரேல் மேம்படுத்தவுள்ளது. இஸ்ரேலிடம் தற்போது மூன்றுநீர்மூழ்கிக் கப்பல்கள் காணப்படுகின்றது. மேலும் இரண்டு மேலதிக நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜெர்மனில் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஸியோனிச அரசின் சர்வதேச
விதிகளை மீறிய செயற்திட்டங்களுக்கு ஐக்கியநாடுகள்சபையும் அதன் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையமும் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments