அமெரிக்காவில் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.











அமெரிக்காவில் அதிகமானமக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக செய்திகள்தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் தீடீர் நிதிநெருக்கடி நிலமை ஏற்பட்டதிலிருந்து இதுவரை 20.5மில்லியன் மக்கள் கடுமையான பெருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.அமெரிக்காவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களில் தொகையானது கடந்த தசாப்தத்தில் 1/3 பகுதியால் அதிகரித்துள்ளது.அமெரிக்காவின் சனத்தொகையில் 6.7வீதம் அல்லது 15பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் கடுமையான ஏழ்மைநிலையில் வாழ்வாதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. 6.7வீதம் என்பது கடந்த 35வருடங்களில், அமெரிக்காவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் உயர்ந்தபட்ச அளவாகும் என அமெரிக்காவின் சனத்தொகை மதிப்பீட்டு ஆணையகத்தின் பதிவுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் எல்லைப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 40வீதமானோர் கடுமையான ஏழ்மைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், நகர்புறங்களில் வாழும் மக்களுடன் ஒப்பிடும்போது இந்நிலமை இருமடங்கினால் அதிகரித்து காணப்படுகின்றது.


அமெரிக்காவின் கொலம்பியா உட்பட நான்கு மாநிலங்களில் கடும் வறுமையால்பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகை,2007முதல் அதிகளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது.கொலம்பியாவில் இத்தொகை 10.7வீதத்தில் காணப்படுவதுடன்,மிசிசிப்பி,நியூமெக்சிகோ போன்ற இடங்களில் இது 4.6முதல் 7வீத அளவில் காணப்படுகின்றது. அமெரிக்காவின் அதிகமான பாதுகாப்புச் செலவினங்களே இந்நிலைக்கு முக்கிய காரணமாகும்; என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments