எகிப்தின் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றுவாரங்கள் இருக்கும் நிலையில்,ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தமது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.புனித ஹஜ்ஜூப் பெருநாளுக்கு முன்னைய தினத்தில் எகிப்திய மக்கள் பராளுமன்றத் தேர்தல் எதிர்பார்ப்புக்களையும்,பெருநாள் வாழ்த்துக்களையும் குறுந்தகவல்கள் மூலம்பரிமாறிக்கொண்டனர்.நவம்பர் மாதம் இறுதிப் பகுதியில் நடைபெறுவுள்ள எகிப்தியப் பாராளுமன்றத்தேர்தலில் 11,000க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த ஹஜ்ஜூப்பெருநாளன்று பள்ளிவாசலுக்குத் தொழுகைக்காக வந்திருந்த
மக்களுக்கு கைலாகுகொடுத்து தமக்கு ஆதரவை வழங்குமாறு வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டதுடன்,சிறுவர்களுக்கு பலூன் மற்றும் விளையாட்டுப்பொருட்கள் போன்ற பரிசுகளையும் அவர்கள் வழங்கினர்.புனித ஹஜ்ஜூப்பெருநாளான்று தொழுகை நடைபெறும் இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள எகிப்திய அதிகாரிகள் தடைவிதிருந்தனர்.சில இஸ்லாமியக்கட்சிகள் புனித ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையின் போது விஷேட துஆ பிராத்தனைகளை ஏற்பாடு செய்திருந்ததுடன்,வேட்பாளர்கள்
இஸ்லாத்தைப்பற்றி நன்றாக அறிந்துவைத்திருக்கின்றனர்.எனவே அவர்கள் ஷரீஆசட்டத்தை கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இவ் இஸ்லாமியக் கட்சிகள் தெரிவித்தன.
எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி எகிப்தின் பாரளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது.எகிப்தின் சர்வதிகார ஆட்சியாளரான ஹூஸ்னிமுபராக் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் இதுவாகும்.எகிப்தின் தென்பகுதி மகாணங்களில் வேட்பாளர்கள் உணவுவகைகளை இலவசமாக வழங்கியும், சிறுவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கியும் மக்களை ஆதரைப் பெறுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எகிப்தின் முக்கிய இஸ்லாமியகட்சியான இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்தின்
பல இடங்களில் போட்டி நிகழச்சிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிவருகின்றனர்.இதேவேளை எகிப்தில் 40வீதான மக்கள் அதாவது 40மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments