ஆபிரிக்காவின் மிகப்பெரிய பள்ளிவாசல் அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸில் அமைக்கப்படவுள்ளது.இப்பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளை அல்ஜீரியன் ஜனாதிபதிஅப்துல்அஸீஸ் பவ்த்பெலிகா அண்மையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார்.
இப்பள்ளிவாலானது அல்ஜீரியாவின் முஹம்மதிய்யா மாவட்டத்தில் 20ஹெக்டயர்விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்டு வருகின்றது.ஒரே தடவையில் ஒருஇலட்சத்தி இருபதாயிரம் பேர் தொழக்கூடியவாறு இம்மஸ்ஜித் அமைக்கப்பட்டு வருகின்றது.மேலும் இப்பள்ளிவாசலுடன் வாசிகசாலையொன்றும், இருபதாயிரம்பேர் படிக்கக்கூடிய
கல்விநிலையமொன்றும் அமைக்கப்படுவுள்ளது.அத்துடன் ஒரு நூதனசலையும்,ஆய்வு நிலையமொன்றும் அமைக்கப்படவுள்ளது. இப்பள்ளிவாசலை கட்டிமுடிப்பதற்கு 1.3பில்லியன் அமெரிக்கடொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஆபிரிக்காவின் மிகப்பெரிய பள்ளிவாசல் உகண்டாவில் காணப்படுகின்றது.இப்பள்ளிவாசலில் ஒரேதடவையில் 15,000பேர் தொழக்கூடிய வசதி காணப்படுகின்றது.இப்பள்ளிவாசல் லிபியாவின் முன்னால் தலைவர் கேணல் கடாபியின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. உலகின் முதலவாது மிகப்பெரியபள்ளிவாசலாக மக்காவில் காணப்படும் மஸ்ஜிதுல் ஹரமும்,இரண்டாவது மிகப்பெரிய பள்ளிவாலாக மதீனாவின் மஸ்ஜிதுல்நபவியும் காணப்படுகின்றது. இதற்காக அடித்தபடியாக தற்போது அல்ஜீரியாவில் கட்டப்பட்டுவரும் பள்ளிவாசல் இருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments