இஸ்லாத்தை ஏற்கும் பிரித்தானிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.






பிரித்தானியாவில் புனித இஸ்லாத்தை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை கூடியளவில்அதிகரித்த வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இஸ்லாத்தைஏற்றுக்கொள்வதில் 2/3 பகுதியினர் பெண்களாவர்.கடந்த வருடம் 5200 பிரித்தானியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.மேலும் அவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் ஆவார்.கடந்த 10வருடங்களில் 40,000க்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக பிரித்தானியாவின் சவன்சி பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது.இவர்களில் பெரும்பான்மை பெண்கள் ஆவர்.2001ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்கள் 53வீதமாகக்காணப்பட்டதுடன், 2002 முதல் 2010வரையான காலப்பகுதியில் இத்தொகை 66வீதமாகக் காணப்பட்டதாக அதே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments