இவ்வருட ஒக்டோபர் மாதத்தில் எகிப்தின் வேலையற்றோரின் எண்ணிக்கை 11.9சதவீதத்தை எட்டியுள்ளதாக எகிப்தின் சனத்தொகை மதிப்பீட்டுப் புள்ளிவிபரங்கள்ஆணையகத்தின் அறிக்கைள் தெரிவிக்கின்றன.இத்தெகையானது கடந்த பத்துவருடங்களில் எகிப்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையில் காணப்பட்ட பாரிய அதிகரிப்பாகும் என எகிப்தின் சனத்தொகை மதிப்பீட்டுப் புள்ளிவிபரங்கள் ஆணையகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.எகிப்தில் 3.1மில்லியன் பேர் வேலையற்றுக் காணப்படுகின்றனர்.மேலும் கடந்த காலண்டில் வேலையற்றோரின் எண்ணிக்கை 1.8சதவீதத்தால் அதிகரித்துள்ளது.கடந்த வருட காலாண்டுகளுடன் ஒப்பிடும் போது இவ்வருட காலண்டுகளின் வேலையற்றோரின் எண்ணிக்கை 35.3 சதவீதத்தால் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
கடந்த வருட ஒக்டோபரில் எகிப்தின் நகர்ப்பகுதிகளில் 7.1சதவீதத்தில் காணப்பட்ட வேலையற்றோரின் எண்ணிக்கை இவ்வருட ஒக்டோபராகும் போது 8.5சதவீதத்தை அடைந்துள்ளது.எனினும் உணவுப்பெருட்களின் விலையேற்றமானது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.5சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. உணவுப்பொருட்களின் வருடாந்த விலையேற்றமானது கடந்த செப்டம்பரில் 8.9சதவீதத்தில் காணப்பட்ட தொகையானது தற்போது 8.7சதவீதம்ஆக குறைவடைந்துள்ளது.
0 Comments