இஸ்ரேலில் மொத்தசனத்தொகையில்,எட்டு இலட்சத்தி முப்பத்தியேலாயிரம் சிறுவர்கள் அடங்களாக 24.4சதவீத மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாகஆய்வொன்று தெரிவிக்கின்றது. இஸ்ரேலில் நான்குபேருக்கு ஒருவர் என்ற ரீதியில்,அதாவது கடந்த வருடம் 1.77மில்லியன்மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தாக
இஸ்ரேலின் தேசிய காப்புறுதி தாபனம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.இஸ்ரேலில் வறுமை நிலை மிகஉயர்ந்த மட்டத்தில் காணப்படுவதோடு,பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையே பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.இஸ்ரேலின் இராணுவத்தில் வேலைசெய்யும் 30,000 க்கும் அதிகமான இராணுவவீரர்களுக்கு பொருளாதார உதவிகள் தேவைப்படுவதாக அண்மையில் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருந்தது.
இஸ்ரேலில் அண்மைக் காலமாக அந்நாட்டு அரசாங்கத்து எதிராக பாரிய
ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.வாழ்க்கைச்செலவு,அநீதி மற்றும் ஊழல் மோசடிகள் போன்றவற்றை ஒழிக்குமாறு அவர்கள் கூறிவருகின்றனர்.
1 Comments
எம்மால் முடிந்த உதவிகளை வறுமையில் வாடும் மக்களுக்கு செய்வதுதான் இஸ்லாமிய வாழ்வியல் முறைமையை பின்பற்றும் தூய முஸ்லிம்களின் தனித்துவமான பண்புகளாக இருக்க முடியும்... எத்தகைய அநீதியை யார் செய்திருந்தாலும்... ஏனெனில் இறைவனின் பண்புகளில் ஒன்று அவன் உதவி செய்பவன்...
ReplyDelete