ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள வேண்டாம் என எகிப்திய பொலீஸாரிம் ஷைகுல் அஸ்ஹர் வேண்டுகோள்.



ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள வேண்டாமென  அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும்,சமகால இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞருமான கலாநிதி அஹமத் அல்தையிப் புதன்கிழமையன்று எகிப்திய பொலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது எக்காரணம் கொண்டும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என எகிப்தின் பொலீஸ்தலைமையகத்துக்கு ஷைகுல் அஸ்ஹர் எகிப்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்அழைப்புவிடுத்தார். எகிப்தியப் பொதுமகன் ஒருவரின் முன்னால் ஆயதங்களால் பொலீஸார்  தமது கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்ததுடன்,
தஹ்ரீர் சதுக்கத்தில் அரச,தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காதவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு எகிப்திய மக்களிம் கலாநிதி அஹமத் அல் தையிப் கேட்டுக்ககொண்டார்.

இம்மாத இறுதிப்பகுதியில் எகிப்தில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை எகிப்தி இராணுவ ஆட்சியாளர்கள் பிற்போட்டதன் காரணமாக கடந்த ஆறுநாட்களாக எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுவரை எகிப்திய இராணுவத்தின் தாக்குதல்களால் குறைந்தது 40பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.



Post a Comment

0 Comments