எகிப்திய பொதுத்தேர்தலில் அதிகமானவர்கள் வாக்களிப்பு.



எகிப்தின் பொதுத்தேர்தல் திங்கட்கிழமையன்று ஆரம்பமானது. மில்லியன்கணக்கான மக்கள் இதுவரை வாக்களித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.எகிப்தின் முன்னால் ஜனாதிபதி ஹூஸ்னிமுபராக் பதவிகவிழ்க்கப்பட்டபின்,முப்பதுவருடங்களில் பின்னர்நடைபெறும் முதலாவது சுதந்திரமான பொதுத்தேர்தல் இதுவாகும்.கடந்த பெப்ரவரிமாதம் மக்கள் புரட்சியின் மூலம்  ஹூஸ்னிமுபராக் ஆட்சிகவிழ்க்கப்பட்டார். முபராக்கின் ஆட்சிக்காலத்தின் போது இஹ்வானுல்முஸ்லிமீன் போன்றஇஸ்லாமிய கட்சிகள் தடைசெய்யப்பட்டிருந்ததன என்பதுகுறிப்பிடத்தக்கது.திங்கட் கிழமை காலை வாக்கெடுப்பு ஆரம்பமானது.இதன் போது
எகிப்தின் பலபகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.எகிப்துபொதுத்தேர்தலில் வாக்களிக்க 40மில்லியன் மக்கள் தகுதி பெற்றிருந்தனர்.திங்கட்கிழமையன்று வாக்களிப்பின்போது வாக்களிப்புச்சீட்டுக்கள் பற்றாக்குறை,தேர்தல்அதிகாரிகளின் போ
தாமை போன்ற காரணங்களினால் சில இடங்களில் வாக்கெடுப்பு தாமதமானது இதனால் வாக்களிப்பு நேரம் இரண்டு மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டது.கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் தேர்தல் முதல்தினத்தன்று அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தேர்தல் முதல்தினத்தன்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், இராணுவத்துக்கும்  இடையில்நடைபெற்ற மோதல்களினால் இதுவரை 47பேர்கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எகிப்தின் தலைநகர் கைய்ரோவில் 47வீதமானோரும், அலக்ஸாந்தரியாவில் 44வீதமானோரும் முதல்நாளன்று வாக்களித்திருந்தனர் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.498 ஆசனங்களுக்காக நடைபெறும் பாரளுமன்றத்தேர்தலில்,50க்கும் அதிகமான தேர்தல்கட்சிகள் போட்டியிடுகின்றன.தேர்தல் இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமை  நடைபெறுகின்றது.

Post a Comment

0 Comments