ஈரானின் 10நாட்கள் கொண்ட கடற்படைப்பயிற்சி சனிக்கிழமை ஆரம்பமானது.






ஈரானின் 10நாட்கள் கொண்ட கடற்படைப்பயிற்சி சனிக்கிழமையன்று ஆரம்பமானது.இதன் இரண்டாவது நாள் பயிற்சியின் போது ஈரானிலேயே தயாரிக்கப்பட்டஅதிநவீன இலத்திரனியல் உபகரணங்கள் பரீச்சிக்கப்பட்டன.பயிற்சியின்இரண்டாவது நாளன்று வெவ்வேறு 
வகையைச் சார்ந்த போர்க்கப்பல்கள்,நீர்மூழ்கிகப்பல்கள், கடலுக்குக் கீழால் சென்று இலக்கை தாக்கக்கூடிய உயர்தொழிநுட்ப ஏவுகணைகள் மற்றும் உளவுத் துறையின் உயர் தொழிநுட்ப தகவல்தொடர்பாடல் பரிமாற்றக் கருவிகள் போன்றன வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இதேவேளை கடலுக்கடியால் வரும் எதிரியின் தாக்குதல்களை தடுக்கும் ஆயுதங்களும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியின் போது பரிசோதிக்கப்பட்டன. கடந்த சில வருடங்களில் இராணுவத்துறையில் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதுடன்,அங்கு உள்நாட்டிலேயே ஆயுதத்தளபாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.


பாரசீக வளைகுடாவின் கிழக்குப்பகுதியான ஹேர்முஸ் முதல் அதீன் வரையான பெரும் கடற்பரப்பை உள்ளடக்கிய பகுதியிலேயே ஈரானின் 10நாட்கள் கொண்ட கடற்படைப் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து 33வீதமான மசகுஎண்ணெய், அதாவது உலகசந்தைக்கு விநியோகிகப்படும் 17வீதமான மசகுஎண்ணெய் அல்லது 15.5பில்லியன் பரல்கள் பாரசீக வளைகுடாவின் ஈரானின் ஹோர்முஸ் பகுதியின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன என அமெரிக்காவின் சக்திவள தகவல் ஆணையகத்தின் 2009ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கின்றது. ஈரானின் ஹோர்முஸ் பகுதியின் ஊடான கப்பல்பாதை மூடப்பட்டால்உலகநாடுகளில் பாரிய மசகுஎண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு,பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments