பிரித்தானியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்.








1889ஆம் ஆண்டு பிரித்தானியாவின் கம்மியுடர் நகரில் ஒரியன்டல் 
கல்விநிலையத்தில் கட்டப்பட்டஸஜஹான் பள்ளிவாசலே பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட முதல் பள்ளிவாசலாகும்.ஒரியன்டல் கல்விநிலையத்தில்கல்விகற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு தொழுவதற்கான வசதியை செய்துகொடுக்கும் நோக்கில்,ஒரியன்டல் கல்விநிலைய ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி வில்ஹேம் லிட்னரினால் 1889ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல்உருவாக்கப்பட்டது. எனினும் கலாநிதி வில்ஹேம் லிட்னர் ஒரு யூதராவார்.மேலும்
பாகிஸ்தானின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு கலாநிதி வில்ஹேம் லிட்னர் பொருளுதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம்தரத்தில் பாதுகாக்கப்பட்ட கட்டிடமாக ஸஜஹான் பள்ளிவாசல் விளங்குகின்றது. இது இப்பள்ளிவாசலுக்கு கிடைக்கப்பெற்றுள்ள அந்தஸ்தைக் காட்டுகின்றது.




பழைமையான ஸஜஹான் பள்ளிவாசல் தற்போதும் காணப்படுகின்றது. அதில்60பேர்களுக்கே தொழக்கூடிய வசதி காணப்படுகின்றது.எனினும் இடப்பற்றாக்குறை காரணமாக இப்பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பழைமையான ஸஜஹான் பள்ளிவாசலை விஸ்தரிப்பதற்காக 2001ஆம் ஆண்டு பள்ளிவாசலின் தென்பகுதியில் உள்ள தோட்டமானது BBC வானோலியின்உதவியினால் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. ஸஜஹான் பள்ளிவாசலானதுபிரிடிஷ் கொலம்பியா மகாணாத்தின் ஸர்ரேநகர் முஸ்லிம்களின் மத்தியநிலையமாக விளங்குகிக்றது.மேலும் ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கான உல்லாசப்பிரயாணிகள் இப்பள்ளிவாசலை தரிசிக்க வருகை தருகின்றனர்.

Post a Comment

0 Comments