அவுஸ்ரேலியாவின் சுதேச இனத்தவர்கள் பாரியளவில் இஸ்லாத்தை தழுவிவருகின்றனர்.






அவுஸ்ரேலிய சுதேச இனமக்கள் இஸ்லாத்தை தழுவும் வீதம் அதிகரித்து வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.2001ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் சனத்தெகை கணக்கீட்டின்படி 641பேர் மாத்திரமே அவுஸ்ரேலிய சுதேச இனத்தைச்சோந்த முஸ்லிம்களாக அடையாளப்படுத்தப்பட்டனர்.2006ஆம்ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தெகைக்கணக்கெடுப்பில் இத்தெகையானது60வீதத்தால் உயாந்து காணப்பட்டது. அதாவது 1014சுதேச இனத்தவர்கள்முஸ்லிம்களாக அடையாயளப்படுத்தப்பட்டனர். அவுஸ்ரேலியாவின் சுதேச இனமக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வரலாற்றுரீதியான உறவுகள்சரியாக அறியப்படவில்லையென்றாலும், அவுஸ்ரேலியாவின் சுதேசஇனத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், குறைந்தது கடந்த3நூற்றாண்டுகளாக வர்த்தக,சமூக மற்றும் திருமணத்தொடர்புகள் 
இருந்துவருகின்றன.1700ஆம் ஆண்டின் முதற்பகுதியில் இந்தோனேஷியாவைச்சோந்த முஸ்லிம் மீன்பிடியாளர்கள் அவுஸ்ரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் சென்றதாகவும்,அவர்கள் அங்கு வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்டதாகவும் வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.1860-1920 காலப்பகுதியில் முக்கியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசிய முஸ்லிம்கள் அவுஸ்ரேலியாவில் நிரந்தராக குடியேறினர்.




இஸ்லாம் எல்லா மக்களுக்கும் சமஉரிமையை வழங்குகின்றது.நிற வேறுபாட்டைஎதிர்த்து சமதானத்தையும்,சுபீட்சத்தையும் போதிக்கின்றது.குடும்பத்துக்கு மற்றும் சமூகத்துக்கு தலைமை வகிப்பதற்கு இஸ்லாம் போதிக்கும் நெறிமுறைகளினால் கவரப்பட்டே பல அவுஸ்ரேலிய சுதேச இனத்தவர்கள் இஸ்லாத்தை தழுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும்இஸ்லாம் இனவாதத்தை எதிர்கின்றது, தார்மீகக் கோட்பாடுகளை போதிக்கின்றது,மற்றும் நல்லசெயல்களை ஏவுகின்றது போன்ற விடயங்களும் அவுஸ்ரேலியசுதேச இனத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள  காரணமாக அமைவதாகஅவ்வாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.







Post a Comment

0 Comments