சிரியா தலைநகரில் இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்.






சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் இரட்டை கார் குண்டுத்தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமையன்று சிரியாவின் டமஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேசியஉளவு அமைப்பின் கட்டிடங்களை இழக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இத்தற்கொலை குண்டுத்தாக்குதலால் குறைந்தது40பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானேர் காயமடைந்துள்ளனர்.சிரியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய மக்கள் எழுச்சியின் பின்னர் நடைபெறும் முதல் தற்கொலை குண்டுத்தாக்குதல் இதுவாகும்.இப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அல்-குவைதா தீவிரவாத வலையமைப்பு தொடர்புபட்டிருக்கலாம்என சிரியாவின் உள்நாட்டுத் தெலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது.


சிரியாவின் தேசிய உளவு மையம் மற்றும் கிளை இராணுவ உளவு மையம்  ஆகிய இரு கட்டிடங்களுக்கு முன்னாலேயே இத்தற்கொலை குண்டுத் தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிரியாவின் மிகப் பலம் வாய்ந்த அமைப்புக்களாகஇவ்விரு அமைப்புகளும் விளங்குகின்றன. சிரியாவின் நிலமைகள் பற்றி ஆராய்வதற்காக அரபுலீக்கின் அதிகாரிகள் அங்கு விஜயம் செய்த அடுத்த நாளே இத்தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 











Post a Comment

0 Comments