2011ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 41 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.



2011ஆம் ஆண்டில் கூடுதலான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள்  பாகிஸ்தானில் 
இடம்பெற்றன.
கடந்த வருடம் 41 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. இதில் 606 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகிறது. தற்கொலை தாக்குதலில் 51 பேர் ஈடுபட்டார்கள் என்று பாகிஸ்தானின் மோதல் கண்காணிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 59 சதவீதமானோர் பொதுமக்களாவர். தற்கொலைத் தாக்குதல்களில் 30ற்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வடமேற்கு கைபர் மாகாணத்தில் கூடுதலான தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக இஸ்லாமாபாத்தை தளமாகக்கொண்டு இயங்கும் மோதல் கண்காணிப்பு நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டில் கூடுதலான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றகாலப்பகுதியாக மார்ச்மாதம் கருதப்படுகிறது.இம்மாதத்தில் ஆயுதாரிகளால் ஆறுதற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன்,இதில் 92 பேர்கொல்லப்பட்டனர்.தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களால் ஆகக்கூடுதலான மரணங்கள் மே மாதத்தில் இடம்பெற்றன.இம்மாதத்தில் 144பேர்,நான்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.எனினும் 2011ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அத்தெகையானது 48வீதத்தால் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களானது பாகிஸ்தானை விடவும் 2.5 மடங்கினால்அதிகரித்துக் காணப்பட்டது.2011 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் 102 தற்கொலைகுண்டுத் தாக்குதல்கள் 675பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் மோதல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments