புகைத்தலை தடுப்பதற்கு இந்தோனேசியாஅரசு உலமாக்களின் உதவியை நாடவுள்ளது.








புகைபிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் அதிகமான மரணங்களை தடுக்கும் நோக்கில்,உலகின் மிகப்பெரிய முஸ்லிம் சனத்தெகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில்புகைபிடிப்பதற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக,அந்நாட்டின் சுகாதார
அமைச்சு இந்தோனேசியாவின் பெரிய இஸ்லாமிய அமைப்பொன்றின் உதவியை நாடியுள்ளது.இந்தோனேசியாவின் சுகாதார அமைச்சரான எத்னான் ரஹாயு,சுகதார அமைச்சின் பொது நோய் குறைப்பு மற்றும் சுற்றுச்சுகாதாரப்பிரிவின் தலைவருமானயோகா அடிட்டமா உட்பட குழுவினர் புகைத்தலின் அபாயங்கள் தொடர்பாக விளக்குவதற்காக இந்தோனேசியாவின் பெரிய இஸ்லாமிய அமைப்பான 
நஹ்த்லதுல் உலமாவின் தலைவர்களை வெள்ளிக்கிழமயன்று சந்தித்தனர்.புதிய விதிமுறைகளை எப்படி மக்களுக்கு அறிவுறுத்த முடியும் என்பதை சுகாதார அதிகாரிகள் விளக்கியதுடன்,2009ஆம் ஆண்டின் சுகாதார சட்டத்தின் ஒரு பிரிவை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு நஹ்த்லதுல் உலமாவின் உதவியை அந்நாட்டு
சுகாதார அமைச்சு நாடியுள்ளது.30மில்லியன் இந்தோனேசிய முஸ்லிம்கள் நஹ்த்லதுல் உலமாவை பின்தொடர்வதன் காரணமாகவே அவ்வமைப்பின் உதவியை தாம் நாடியுள்ளதாக சுகாதார அமைச்சர் எத்னான் ரஹாயு தெரிவித்துள்ளார்.


சீனா,இந்தியாவிக்கு அடுத்தாக அதிகமான புகைத்தல் பாவனையாளர்களைக் கொண்ட நாடாக இந்தோனேசியா காணப்படுகின்றது.உலகில் மலிவாக சிகரட்கிடைக்கும் நாடாக இந்தோனேசியா காணப்படுவதுடன்,அங்கு 60மில்லியன் மக்கள்
புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.ஒரு வருடத்து இரண்டு இலட்சம் இந்தோனேசிய மக்கள் புகைத்தலால் நோய்களுக்கு உள்ளாவதாகமதிப்பிடப்பட்டுள்ளது.புகைத்தலால் ஏற்படும் நோய்களால் ஒவ்வொரு வருடமும் உலகில் 6மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.தற்போது புகைப்பிடிப்பவர்கள்,இப்பழக்கத்தை
தொடாந்தால் 21ஆம் நூற்றாண்டில் புகைத்தலால் ஒரு பில்லியன் மக்கள் மரணத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments