ஈரானின் அணு விஞ்ஞானி கார் குண்டுத்தாக்குதலினால் கொல்லப்பட்டுள்ளார்.






புதன்கிழமை காலையன்று ஈரானின் அணுவிஞ்ஞானியான முஸ்தபா அஹ்மதி ருசானின் காரில் இனந்தெரியாது பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததன் மூலம் அவர்கொல்லப்பட்டுள்ளார்.ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள அல்லாமா தபாதபாகி பல்கலைகழகத்தின் அருகே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.காரில் பொருத்தப்படிருந்த குண்டு வெடித்ததன் மூலம் ஈரானின்
அணுவிஞ்ஞானி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், அவருடைய சாரதி மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவரின் சாராதியும் மரணமடைந்தார்.அஹ்மதி ருசான், ஈரானின் ஷரீப் பல்கலைகழகத்தின் தொழிநுட்ப இரசாயனவியல் பட்டதாரியும், ஈரானின் நடன்ஸ் அணு வசதிகள் பிரிவின் பிரதி முகாமையாளராகவும் செயற்பட்டு வந்தார்.


அஹ்மதி ருசான் குண்டுத்தாக்குதலினால் கொல்லப்பட்ட ஈரானின் மூன்றாவதுவிஞ்ஞானியாவார்.கடந்த இரு வருடங்களுக்குள் ஈரானின் மேலும் இரண்டு அணு விஞ்ஞானிகள்குண்டுத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரானின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸஹ்ரியாரி மற்றும் கலாநிதி அப்பாஸியினதும் வாகனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலினால் பேராசியர் ஸஹ்ரியாரி கொல்லப்பட்டதுடன், கலாநிதி அப்பாஸி காயமடைந்தார்.கலாநிதி அப்பாஸி தற்போது ஈரானின் அணுசக்தி அமைப்பின் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். இவ்விஞ்ஞானிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாட் மற்றும் அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA என்பன காரணமாகும் என ஈரானின் உளவுப் பிரிவு தெரிவித்திருந்தது.2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மோட்டர் சைக்கில் குண்டுத்தாக்குதலினால் ஈரானின் மற்றுமொரு அணுவிஞ்ஞானியான பேராசிரியர் மசூத் அலி முஹம்மதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ருசானினின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மோசாட் மற்றும் முஜாகிதீன் இ கஹல்ப் (MKO)  என்ற பயங்கரவாதக்குழுவுமே உரிமையாளர்கள் என இஸ்ரேலின் குறித்த ஓர் ஊடகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments