உலகில் மிகப்பழமைவாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியொன்று பிரித்தானிய நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.






ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள பிரித்தானிய நூதனசாலையிலவெள்ளிக்கிழமையன்று ஆரம்பமான உலக ஹஜ் பிரீமியர் கண்காட்சியில் உலகில் உலகில் மிகப்பழமைவாய்ந்த புனித அல்குர்ஆன் பிரதியொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இப்புனித அல்குர்ஆன் பிரதியானது 8ஆம் நூற்றண்டு காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாஇல் குர்ஆன் என அழைக்கப்படும் இப்புனித அல்குர்ஆன்,மக்கா அல்லது மதீனாவில் எழுதப்பட்ட பிரதியாகும் என பரவலாக நம்பப்படுகின்றது.மாஇல் என்பதன் பொருள் சாய்ந்தது என்பதாகும்.இவ் அல்குர்ஆன் பிரதியானது வலதுபக்கம் சாய்ந்த நிலையில் காணப்படுவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. பல எண்ணிக்கையான பக்கங்கள் மேம்படுத்தப்பட்ட முறையில், இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதியாக இது விளங்குகின்றது.உலகின் மிகப்பழமை வாயந்த இவ் அல்குர்ஆன்பிரதியில், எழுத்துக்களை இலேசாக உச்சரிப்பதற்கு உதவிசெய்யும் குறியீடுகள் இல்லாதிருப்பதுடன்,இரு வசனங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு இரண்டு அல்லது மூன்று கோடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.




மாஇல் குர்ஆன் பிரதியானது பிரித்தானிய அருங்காட்சிகத்துக்கு 19ஆம் நூற்றாண்டு முதல் சொந்தமாக்கப்பட்டதாக அவ் அருங்காட்சியகத்தின் தலைவர் அரேபிய செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். பிரித்தானிய அருங்காட்சியகத்தில் நடைபெறும் உலக ஹஜ் பிரீமியர் கண்காட்சியானது சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்அஸீஸ்
பொது நூலகத்துடனான கூட்டு முயற்சியுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments