ஜெர்மனியில் முதலாவது இஸ்லாமிய மத நிலையம் திறக்கப்பட்டுள்ளது.




ஜெர்மனியில் முதலவாது இஸ்லாமிய மத நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி கல்வி அமைச்சரான அன்ஜே ஸச்வானால் இந்நிலையம் திறந்துவைக்கப்பட்டது.இந்நிலையத்தில் 23பெண்களும் 13ஆண்களும் இஸ்லாமிய மதயியல் துறையில் கலைமாணிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக தங்களை பதிவுசெய்துள்ளதாக இஸ்லாமிய கலாச்சார உறவுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.ஜெர்மனி முழுதும் காணப்படும் பள்ளிவாசல்களுக்கான எதிர்கால இமாம்களை உருவாக்குவதே இப்பட்டப்படிப்பின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது.


எதிர்காலத்தில் இன்னும் பல இஸ்லாமிய மதநிலையங்களை ஜெர்மனியில்உருவாக்குவதற்கு உத்தேசித்துள்ளதாக ஜெர்மனியின் கல்வி அமைச்சு மற்றும் ஆய்வு சம்மேளனம் தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments