ஈரான் தனது புதிய செய்மதியை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியுள்ளது. 'நவீத் இ எல்மோ ஸனாத்' எனப்பெயரிடப்பட்டுள்ள இச்செய்மதியானது, முற்றாக ஈரானின் உள்நாட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.ஈரானின் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநஜாத்தின் கட்டளையின் தொடாந்து பெப்ரவரி 3ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று 'நவீத் இ எல்மோ ஸனாத்' செய்மதியானது வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது.ஈரானிய விஞ்ஞானிகளால் முற்றாக உள்நாட்டிலேயே இச்செய்மதி உருவாக்கப்பட்டுள்ளதுடன், 1979ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் 33ஆவது நிறைவையொட்டி இச்செய்மதி ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ஈரானின் தயாரிப்பான நவீத்செய்மதியானது புவியில் இருந்து 250-370 கிலோமீற்றர் இடைத்தூரத்தில் புவியைவலம்வரும் என ஈரான் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் ஹமீத் பஸீலி
தெரிவித்துள்ளார்.தெலைதூர-உணர்வுஅறிதல் ஆய்வுக்கென தயாரிக்கப்பட்டுள்ள இச்செய்மதி புவியின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை துல்லியமாக எடுக்கக்கூடியதுடன், 90நிமிடங்களுக்கு ஒருமுறை புவியில் உள்ள அதன் செய்மதி நிலையத்துக்கு அப்படங்களை அனுப்பும் ஆற்றல் கொண்டது
எனவும் ஹமீத் பஸீலி மேலும் தெரிவித்துள்ளார்.
'நவீத் இ எல்மோ ஸனாத்' செய்மதியானது தொலைத்தொடர்பு,அளவீட்டு மற்றும் விஞ்ஞான செயற்பாடுகள் போன்ற துறைகளில் பரவலான அளவில் பயன்படுத்தமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.ஈரான் தனது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதலாவது செய்மதியை 2009ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஏவியது.ஓமிட் என பெயரிடப்பட்ட இச்செய்மதியானது தகவல் பரிமாற்ற செயற்பாடுகளுக்கென விண்வெளிக்கு அனுப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபையின் 24உறுப்பு நாடுகளைக்
கொண்ட வெளிப்புற விண்வெளியில் சமாதான செயற்பாடுகள் அமைப்பின் ஓர் அங்கத்துவ நாடாக ஈரான் விளுங்குகின்றது என்பது குறிப்படத்தக்கது.
0 Comments