பிரான்ஸின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்டரஸ்பேர்க் நகரில்
முதலவாவது உத்தியோகபூர்வ முஸ்லிம் மையவாடி திறக்கப்பட்டுள்ளது. இந்நகர்வானாது பிரான்ஸில் மிகப்பெரிய சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் சமூகத்தின் மதஉரிமைகளை பெற்றுக்கொள்வதில் கிடைத்ததோர் வெற்றியாகும்.பிரான்ஸின் முதலவாவது முஸ்லிம் மையவாடி திறப்பானது அந்நாட்டு முஸ்லிம்கள்வரலாற்றில் மிகமுக்கிய தினமாவதுடன், இம்மையவாடியானது பிரான்ஸ் முஸ்லிம்களின் ஓர் முக்கிய அடையாளச்சின்னமாகும் என பிரானஸ் முஸ்லிம் நம்பிக்கை ஆணையகத்தின் தலைவர் மொஹம்மட் முஸாஒய் செய்தி நிறுவனமொன்றுக்கு தெரிவித்தார்.முதலவாவது முஸ்லிம் மையவாடி திறப்புநிகழ்வில் பிரான்ஸ் உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இம்மையவாடியில் ஏறத்தாள ஆயிரம் மக்பராக்களுக்கான இடவசதிகள் உள்ளதுடன்,ஜனாஸா குளிப்பாட்டும் அறை,தனியான தொழுகைஅறை என்பன இம்மையவாடியுடன் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையவாடியை அமைப்பதற்கு 800,000 யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளன.இதற்கு முன்னர் பல தசாப்தகாலமாக பெரும்பாலும் மரணிக்கப்பட்டவர்களின் உடல் அவர்களது சொந்தநாடுகளிலுக்கு அடக்கத்துக்காகஅனுப்பப்பட்டது. பிரான்ஸிய மண்ணில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக
உத்தியோகபூர்வ மையவாடியை அமைப்பதற்கு பிரான்ஸ் முஸ்லிம்களால் நீண்டகாலமாக அழைப்புவிடுக்கப்பட்டுவந்தது. பிரான்ஸில் ஏறத்தாள 6மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments