உலகின் ஒவ்வொரு அரபுநாடுகளிலும் உள்ள 190 முன்னணி முஸ்லிம் அறிஞர்கள்சிரியா பற்றிய கூட்டுப்பிரகடணமொன்றை வெளியிட்டுள்ளனர். சிரியாவின் விடுதலை இராணுவம் மற்றும் எதிர்ப்புநடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் என்பன மதங்கள்
மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மதித்துநடக்குமாறும், அவர்களை தீங்கு செய்வதிலிருந்து பாதுகாக்குமாறும் அரபுலகின் முன்னணி முஸ்லிம் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்." சிரியாவில் காணப்படும் மதங்களின் உரிமைகளை மற்றும் சிறுபான்மை சமூகங்களை பாதுகாத்தல்,இச்சிறுபான்மையினர் ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக வாழும் சிரியாவின் மக்கள் ஆவர்.அவர்களும் ஏனையவர்களை போல் அனைத்துக் குடியுரிமைகளைப் பெற்றுள்ளனர். போன்ற வாசகங்களை இப்பிரகடணம் உள்ளடக்கியுள்ளது." சிரியா பல மதங்களையும்,சிறுபான்மை சமூகங்களையும் கொண்ட நாடாகும். சிரியாவில் ஏறத்தாள ஒன்பது சதவீதத்தினர் கிறஸ்தவர்களாவர்.மேலும் 12 சதவீதத்தினர் வெவ்வெறு பிரிவுகளைச் சேர்ந்த ஷியாக்களாக காணப்படுகின்றனர்.சிரியாவில் மிகப்பெரிய சிறுபான்மை
இனத்தவர்களாக குர்திஸ் மக்கள் வாழ்கின்றனர்.மேலும் துருக்மெனியர், ஆஸ்ரியர் மற்றும் ஆர்மேனியர்கள் இனத்தவர்களும் வாழ்கின்றனர்.
சிரிய அரசு பொதுமக்களுக்கு செய்யும் அட்டூழியங்களை இப்பிரகடணம்
கண்டித்துள்ளது.பொதுமக்களுக்கு அநியாயம் செய்யும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவுதெரிவிப்பது பாவமான செயலாகும் என 107கையொப்பங்கள் இடப்பட்ட அரபுஉலக முஸ்லிம் அறிஞர்களின் பிரகடணம் தெரிவிக்கின்றது.ஏற்கனவே பொதுமக்கள் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்,அதற்காக இறைவனிடம் வருந்தி பிழைபொறுக்கத் தேடுமாறும் அரபுலக முஸ்லிம் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரகடணத்தில் உலகின் முன்னணி முஸ்லிம் அறிஞர்களான எகிப்தின் தலமைமுப்தி கலாநிதி அலிஜூம்ஆ,செய்க் அப்துல்லாஹ் பின் பைய்யா-முர்தானியா,செய்க் யூசுப் அல்கர்ளாவி-கட்டார் மற்றும் செய்க் ஸல்மான் அல்அவ்தா-சவூதிஅரேபியா,
செய்க் அப்துல் மஜீத் அல்ஸின்தானி-யெமன் ஆகியோர்களும் கையெழுத்திட்டனர்.
0 Comments