ரஷ்யாவின் பிரதமர் விலாமிடிர் புடின் சமயங்களை ரஷ்ய பொதுப்பாடசலைகளுக்குஅறிமுகப்படுத்தும் ஓர் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்.இதன்படி ரஷ்யப்பொதுப் பாடசாலைகளில் சமயபாடவிதானம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறு மாதிரிகளில் ஒன்றை தெரிவுசெய்ய முடியுமானதுடன், ஆசிரியர்களுக்கான பாடநெறிகளும்,பயிற்சி வகுப்புக்களும்ஆகஸ்ட் மாதம் இறுதிப்பகுதி வரை நடைபெறவுள்ளது. ஆறு மாதிரிகளில் நான்குமாதிரிகள்: ஒர்தடோக்ஸ் கிறிஸ்தவம், இஸ்லாம், யூதமதம்,பௌத்தமதம் என்பனவாகும்.உலக அடிப்படை மதங்கள், மதச்சார்பற்ற நீதிநெறி என்பன மீதமான இரண்டு மாதிரிகளுமாகும்.ரஷ்ய கல்விஅமைச்சின் தரவுகளின் படி 42சதவீத பெரும்பான்மை மாணவர்கள் மதச்சார்பற்ற நீதிநெறியை கல்வி கற்பதில் ஆர்மாகவுள்ளதுடன், 30சதவீதமாணவர்கள் ஒர்தடோக்ஸ் கிறிஸ்தவத்தை கற்பதற்கு வருகைதர விருப்பமாகவுள்ளதுடன், 18சதவீமான மாணவர்கள் உலக அடிப்படை மதங்கள் பற்றி கற்பதற்கு ஆர்மாகவுள்ளதுடன்,9சதவீதமான மாணவர்கள் அடிப்படைஇஸ்லாத்தை கற்க ஆர்மாக உள்ளதுடன் மற்றும் ஒருசதவீதமான மாணவர்கள் அடிப்படை பௌத்தத்தைக் கற்கவும் ஆர்வமாகவுள்ளனர்.ஏற்கனவே ரஷ்யாவில் இருபதுக்கும் அதிகமான பகுதிகளில் பரீட்சார்த்த ரீதியாக சமயபாட வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றதுடன், இவ்வகுப்புக்களில் மூன்று இலட்சத்திக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைதலைப்பற்றி மூன்று மதத்தலைவர்களுடனும் விலாமிடிர் புடின் கலந்துரையாடினார். இதேவேளை இச்செயற்பாட்டுக்கு ரஷ்யாவின்கிறிஸ்தவ,இஸ்லாமிய மற்றும் யூதமதத்தலைவர்கள் தமது பராட்டை புட்டினுக்குத் தெரிவித்துள்ளனர்.
0 Comments