உலகின் முதலாவது இஸ்லாமிய சமூகஇணையதளமான ஸலாம்வேல்ட் இணையதளத்தில் மேற்குலக சமூகஇணையதளங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஹராமான விடயங்களை தவிர்க்கவுள்ளதுடன், அது ஐந்து வருடங்களில் 50மில்லியன் பாவனையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.ஸலாம்வேல்ட் சமூகவலைப்பின்னலின்முதலாவது உச்சிமாநாடு இஸ்தான்பூல் நகரில் நடைபெற்றது.இம்மாநாட்டில் 40நாடுகளைச் சேர்ந்த 250பேர் கலந்துகொண்டனர்.ஏனைய சமூக இணையதளங்களின் உள்ளடக்கங்கள் பாதுகாப்பற்றுக் காணப்படுவதோடு, ஹராமான பலவற்றைக் கொண்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளில் இளைஞர்களை இணைப்பதற்கு நாம் விரும்பவில்லை என ஸலாம்வேர்ல்ட் இணையதளத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஸைபீரியாவின் பிரபல முஸ்லிம் வர்த்தகர் அப்துல்வாஹித் நியாதோ தெரிவித்துள்ளர்.
ஸலாம்வேல்ட் இணையதளத்தை அபிவிருத்தி செய்யவதற்கு ரஷ்யா மற்றும் துருக்கிபோன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் 10மில்லியன் அமெரிக்கடொலர்களை முதலீடுசெய்துள்ளதுனர். இஸ்லாமிய பதிப்புடைய ஓர் பேஸ்புக்கை உருவாக்கும்நோக்கிலே இம்முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments