உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் கின்னஸ்சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.








உலகின் மிகப்பெரிய அச்சிடப்பட்ட புனிதஅல்குர்ஆன் கின்னஸ் சாதனைப்புத்தகத்தில்இடம்பெற்றுள்ளது.ரஷ்யாவின் கஸான்நகரின் பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள அல்குர்ஆனானுக்கு உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் என்ற கின்னஸ்சாதனைக்கான கின்னஸ் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக டடர்ஸ்தான் பகுதியின் கவுன்ஸிலர் மின்மிடிமர் ஸெய்மியவ் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். இப்புனிதஅல்குர்ஆனானது 150x200 சென்றிமீற்றர் பரிமானமுடையது. 800கிலோகிராம் நிறையுடைய இவ்அல்குர்ஆன் பிரதியானது 632பக்கங்களைக் கொண்டதுடன்2மீற்றர் உயரமும், 1.5மீற்றர் அகலமும் உடையது.இதன் தாள்கள் ஸ்கொட்லான்டில் அச்சிடப்பட்டவையாகும். தங்கம் மற்றும் வெள்ளியினால் இதன் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இப்புனித அல்குர்ஆனின் முன்அட்டை விலையுயர்ந்த இரத்தினக்கற்கள் பொறிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.இக்குர்ஆன் பிரதியானது இத்தாலியில் உருவாக்கப்பட்டதாகும்.


கஸான் நகரம் டடர்ஸ்தான் பகுதியின் தலைநகராகும்.டடர்ஸ்தான் பகுதியானதுமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ரஷ்யாவின் தன்னாட்சிக் குடியரசாகும்.ஐரோப்பாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான குல்ஷரீப் பள்ளிவாசலானது கஸான் நகரிலேயே அமைந்துள்ளதுடன், உலகின் மிகப்பெரிய புனித அல்குர்ஆன் பிரதியானது
இப்பள்ளிவாசலிலேயே வைக்கப்பட்டுள்ளது.டடர்ஸ்தான் பிரதேசத்தின் மொத்த சனத்தெகையில் 53.2சதவீதமானோர்,அதாவது 3.8மில்லியன் மக்கள் முஸ்லிம்களாவர்என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments