காஸாப்பகுதியில் இஸ்ரேலிய இராணுத்தின் தாக்குதல்களினால் வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 18பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் மரணச்சடங்கில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கலந்துகொண்டனர். இஸ்ரேல் காஸாவின் மீது தாக்குதல் நடத்துவது,அரபுலகம் மற்றும்
சர்வதேசசமூகம் என்பன மௌனமாக இருப்பதனாலேயே என நாம் நம்புகிறோம் என காஸாவின் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். காஸாவின் மீது அண்மைக்காலமாகஇஸ்ரேலிய இராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றது.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை உட்பட சர்வதேசசமூகம் காஸாவின் மீது நடத்தும் தாக்குதல்களுக்கு மௌமனம் காத்துவருவதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக பலஸ்தீன் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உறுப்பினரான
அப்துல்லாஹ்ஸாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியச் சார்பான மேற்குஊடகங்கள் இஸ்ரேலின்தாக்குதல்களை நியாப்படுத்தும் வகையில் பலபொய்யான செய்திகளை வெளியிட்டுவருவதாக பலஸ்தீனின் செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான ஸைத் பஸர்ஸிதான் தெரிவித்துள்ளார்.
0 Comments